ஆண்மைகள் கதறிக் கெஞ்சுகிறது .....

வன்புணரந்தழிப்பவன் ஆணல்ல...
அரக்கன்..
இதில் அழுவதெல்லாம் ஆண்மைகளே..
அரக்கர்களுக்கு இதில்
இடமில்லை...

வெற்றுப் பௌர்ணமிகளிலோ
கற்றை இருள்களிலோ
அவிழ்க்கப் படுவதில்லை......!
அரைநிலா முகில்நுழைந்து
முன்னெடுக்கும் போதே
கழன்று வீழ்கிறது எங்கள்
மோக மூட்டைகள்.....

முடிந்த கூந்தலிலுமல்ல....
மொட்டைத் தலையிலுமல்ல...
விரிந்து வீழ்ந்த கறுப்பருவியில்
மட்டுமே
பின்கழுத்து தொட்டுவிடத்
தூண்டுகிறதெங்கள் அட்ரீனலினும்..
ஆக்சிடாக்சினும்...

நகங்களில் அழுக்கெடுத்திருப்பது
அழகு... பூச்சென்பது
அதீதம்..... அதீத வனப்புகளில்
பெருகி வழிந்து சிதைகிறதெங்கள்
புரோலாக்டின் நொதிகள்....

ஓட்டைப் படகிலமர்ந்து
சைவச் சுறாக்களுக்கு
இரத்த வாடை ஊற்றவேண்டாம்
மெல்லிசைக் காடுகளே...

பிடி கவராக் களிறு
மதநீர் மிகுதியில் ஊரழிக்கும்....
டெஸ்டோஸ்டீரோன்களுக்கு
போர்க்களம் மட்டுமே
தெரியும்....
டெஸ்டோஸ்டீரோன்களை
சதைக்கல் காட்டிக்
கூரேற்றிவிடாதீர்கள் எம்
தேவதைச் சமூகங்களே.....

வன்புணர்வுகள் நெருப்புத்
தீவிரவாதம்.... சரியே...!
நிர்வாணம் காட்டிப் போராடும்
இந்த உளவியல் மென்புணர்வுகளென்ன
காந்தீயம் என்றா பெயர்.....?

கருங்கூந்தலில் செம்மையும்
சுருள்மையும்.....
குதிகாலோடு ஒரு குத்துக்கால்...
புருவம் வளைந்தேறித் தொடும்
புல்லுக்காட்டு இமைகள்....
நெகிழ்கிறது மனம்.. அழகியல்
உச்சங்களில்..... கூடவே
திறந்த வயிறும் திமிறும்
மார்புமான எச்சங்கள் கடக்கும்போது
தீப்பிடிக்கிறதெங்கள்
உயிர்வேதியியல் திரவப் பைகளில்...

காட்டிக் கவர்நடை பழக்கும்
வினையூக்கிகள் வேண்டாம்...
ஒற்றைவிரல் பிடித்து
கூடக்கடந்து வரும் நற்றோழமை
போதும்...

இது கொழுப்பூசியேற்றிக்
கூத்தடிக்கும் பெண்ணாதிக்க
கிருமிகளுக்கே..
என் தாராவித் தார்ச்சாலை
கூடாரத் தோழிகளுக்கல்ல......

(தணிக்கைகளும் கொடியேற்றங்களும் வரவேற்கப்படுகின்றன)

எழுதியவர் : சரவணா (18-Jan-13, 10:35 am)
சேர்த்தது : கட்டாரி
பார்வை : 403

மேலே