பூவே உன் கண்களை பார்த்தேன்

பூவெ உன் கண்களை பார்த்தேன்
என்னை மறந்தேன் ,
பார்த்த நொடி என்னை மறந்து உன்னை வரைந்தேன் ,
உந்தன் கண்கள் வானவில்கள்
ரோஜா பூக்கள் உன் கன்னங்கள்
ஒ இது போதும் நீ போதும் எனக்கு
எப்போதும் ,
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே
இனி ஏன்றும் வருவாய் என் பாட்டில் ஸ்வரமாகதானே மானே
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே

சிரிக்கின்ற பூவே என்னை மெல்ல சிதைகின்ற தீவே
நான் உருகினேன் மெல்ல மறுகினேன் உனக்காகவே
பொழிகின்ற வானம் உன் அழகிய மௌனம் இடம் மாறவே நம் இதயமே நிஜமாகுமே
இடி மின்னல் போல் இறங்கினாயே
உன் அழகினில் என்னை விரட்டினாயே
ஒ இது போதும் நீ போதும் எனக்கு எப்போதும் ,
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே
இனி ஏன்றும் வருவாய் என் பாட்டில் ஸ்வரமாகதானே மானே
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே

மின்மினி பூச்சி உன் கண்விழி ஆச்சி
உன் ஒலியினில் ஒளிர்கிறேன் ஒருவனாய்
உறைந்திடும் மூச்சு
உன் அன்பு கண்களின் சூட்சி உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
இனிமையாய் ,
உந்தன் பின்னால் என்றும் வருவேன் -உயிர் கேட்டால் அன்றே தருவேன்
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே
இனி ஏன்றும் வருவாய் என் பாட்டில் ஸ்வரமாகதானே மானே
இன்றே நீ வந்தாய் எந்தன் வரமாகதானே மானே
வரமாகதானே மானே இனி வருவாய் என் பாட்டில் ஸ்வரமாகதானே மானே

எழுதியவர் : பிரவீன் குமார் (18-Jan-13, 3:13 pm)
சேர்த்தது : pravmaxi
பார்வை : 155

மேலே