முகில் விலக்கிய நிலா

முகிலைக் கொஞ்சம்
விலக்கி ஒரு நொடி
ஒளி முகம் காட்டி

பின் முகிலில்
மறையும்
முழுமதி போல்

கண் இமைப்பில்
திரைதனை விலக்கி
நிலா முகம் காட்டி
ஒளிந்த . பூவே . !

மின்னல் கீற்றென
விழி வழி நுழைந்து ,
நரம்பில் மீட்டிய
நாதமும் நீதானா..!

இதயம் நுழைந்து
நிறைந்து கமழும்
சுகந்தமும் நீதானா..?

தென்றல் சுமந்து..
வரும் நறுமணம்
உணர்ந்த நந்தவனத்
தும்பி யென

காற்றில் பறந்தேனே ...
தேனே .! நானே . . !

எழுதியவர் : Minkavi (18-Jan-13, 3:06 pm)
பார்வை : 176

மேலே