களவு போயின கனவுகள்

களவு போயின கனவுகள்

இன்று மட்டும் நான்
எடை கூடி போயிருந்தேன்

காற் சட்டை பையில்
கனமாய் சம்பள பணம்

அம்மாவுக்கு புதுச்சேலை
இளைய தங்கைக்கு
இன்னொரு தாவணி
தம்பிக்கு தமிழ் கோனார்
கடைக்குட்டிக்கு
கணக்கு நோட்டு

பலவாக கனவுகளுடன்
பஸ்ஸிலேறி பயணித்து
நிறுத்தத்தில் இறங்கி
நிஜார் பைக்குள் கை விட
அதிர்ந்தேன் . "ஐயோ"

களவாடப்பட்டிருந்தன
என் காசுகளும்
கூடவே என் கனவுகளும்.

எழுதியவர் : கே. ரவிச்சந்திரன் (19-Jan-13, 2:17 pm)
பார்வை : 195

மேலே