நீ ஆணா..??

காதலென்று
பெயர் சொல்லி
பிதற்றுபவனே ..

என் மதம் வேறன்பதால்
மறந்து போனாயோ ...?

முகம் பார்த்து வந்த
காதலை ..
மதம் பூசியா
மழுப்பபார்க்கிறாய்...??

மதம்
மனிதனின் அடையாளம் ...
காதலோ
உயிரின் அடையாளம் ...!!

நீ
தொலைத்து போனது
காதலை அல்ல ..
உன் கவுரவத்தை ..???

ஒரு வரி காரணம் சொல்லி
நூறு வரிக்காதலை
மறைத்தாயே?

ராஜாவையும் ரஹ்மானையும்
ரசித்த நீ
காதலில் மட்டும் ஏன்
கபட நாடகமாடினாய்..??

நல்ல வேலை
என் வீட்டு பிரியாணியை
ருசித்ததோடு
நிருந்திக்கொண்டாய் ..!!

நான் தோற்று போனதற்கு
கவலை இல்லை ..
காதல் தோற்றுவிட்டதே
உன்னைப்போல்
ஒரு கயவனால் ...!!!

இப்போது புரிந்து விட்டது ..
நீ காதலித்தது
மூடியிருக்கும் என் மனதை அல்ல
முட்டி நிற்கும்
என் அழகை ...????

எழுதியவர் : அபிரேகா (19-Jan-13, 2:38 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 156

மேலே