அப்பாவும், சித்தப்பாவும்.

சித்தப்பா
சிறுவனாக
இருந்தபோது.

அப்பாவின் அப்பா
ஊருக்கு போனார்.
அப்பாவின்
அம்மா
அப்பம் சுட்டார்.

அப்பாவி அப்பா
விளையாடினார்.
பப்பிபோல சித்தப்பா
தத்தி விளையாடினார்.

எண்ணம் பயணப்பட
எண்ணெயில்
அப்பம் சுட
பயணத்தை எண்ணியபடியே
அப்பத்தை எண்ணினாள்.

அப்பாவிற்க்கும்
ஒன்றுதர
அப்பம் ஒன்றெடுத்து
தட்டத்திலிட்டு
தம்பியோடு சாப்பிடென்றாள்.

அப்பப்பா சூடும்
ஆற வில்லை
அப்பாவின் அன்பும்
மாறவில்லை.


நீட்டினால் கைசுடும் என்று
ஊட்டினார் தம் வாயால்
அப்பாவாய் அப்பம்.
சித்தப்பா வாய்க்கு போகவேண்டும்.

சிறுத்தை குட்டியாய்
சீறி வந்த சித்தப்பா
ஃப்ரெஞ்ச் கிஸ் போல
லிப்லாக் செஞ்சிட்டார் சித்தப்பா.

அப்பம் நழுவிடுச்சி
உதடு மாட்டிக்கிச்சி.

அப்பா இழுக்க. சித்
தப்பா இழுக்க
மௌனயுத்தம் போல்
மல்லு கட்ட,

முடியல.

வைகைபுயல் வடிவேலாய்
வாய்வலியால் அப்பா
முக்க தொடங்கினார்.

க்கூம்ம்ம்...

பயண நினைவிலிருந்து
பையன்கள் நினைவு வர
திரும்பி பார்த்தவளுக்கு
தூக்கிவாரிப் போட, அவள்

சித்தப்பா முதுகில்
ஒன்று போட
சித்தப்பா ஆ என்று அலற
அப்பா தப்பித்து
ஓட
ஆட்டம் முடிந்தது.

இப்பவும் இந்த
கதை கேட்டால்
அப்பா துக்கப் படுவார். சித்

தப்பா வெக்கப் படுவார்.

எழுதியவர்
லீனாமாதரசி.

சித்தப்பா
ஜே. ஜி. ரூபன்

எழுதியவர் : ஜே.ஜி. ரூபன். (19-Jan-13, 4:58 pm)
பார்வை : 435

மேலே