கதவு திறக்க முடியாது

ஒரு பிரபலமான சங்கீத வித்துவான் என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் ஒருவரிடம் சில இளைஞர்கள் சமூக பணியை செய்ய ஒரு சங்கீத நிகழ்சியை நடார்த்தி அதில் வரும் நிதியை கொண்டு சிறுவர் பாடசாலை கட்ட தீர்மானித்து சங்கீத வித்துவானிடம் வந்து தமது நோக்கத்தை சொல்லி நிகழ்ச்சியை நடார்த்த கேட்டனர் ..
சரி சொன்ன வித்துவான் இதனால் எனக்கு என்ன பிரயோசனம் என்று கேட்டார்
ஆமா சார் ''உங்களுக்கு அந்த மேடையில் சங்கீத இமையம் '' என்று பட்டம் சூட்டி பொன்னாடை போட்டு கவுரவிப்போம் என்றனர் .
மகிழ்ச்சியடைந்த வித்துவான் ஓகே சொல்ல 500.1000.2000. ரூபாடிக்கட்டுகள் அடித்து அரங்கு நிறைந்த கூட்டம் .
கச்சேரி தொடக்கி 10 நிமிடத்தில் 1000 ரூபா டிக்கட்
எடுத்த ஒருவர் அவசர அவசர மாக ஓடி வந்து
டிக்கட்டை நீட்டி ''கதவை திறந்து உள்ளே விடும்படி ''கேட்டார் '' டிக்கட் கிழிப்பவர் முடியவே முடியாது
என்று உறுதியாக நின்றார் .
இருவருக்கும் பெரும் வாக்கு வாதம் வந்து விட்டது ..இறுதியில் டிக்கட் கிழிப்பவர் சொன்னர்ரே
ஒரு சொல் சார் "உங்களுக்கு ஒருவருக்காக கதவை திறந்தாள் உள்ளே இருக்கும் எல்லோரும் ஓடிடுவாங்க சார் '' எங்கட கஸ்ரத்த புரிந்து கொள்ளுங்க சார் என்று மன்றாடினார் .

எழுதியவர் : கவிஞர் இனியவன் (18-Jan-13, 11:00 pm)
பார்வை : 329

மேலே