ஒரு குடிகாரனின் மேடைப்பேச்சு

நகைச்சுவை


அலோ என் சகா குடிமக்களே, சக இந்திய குடிகளே,
நாஞ்சொல்ல வர்ர கருத்து எல்லாத்தையும் ஒரு குடிகாரனோட பேச்சுனு சைடுல வெக்காம எங்கருத்துகள நல்லா கவனிச்சு, அதுல இருக்கர உண்மை புரிஞ்சு உருக்கமான முறையில சிந்தியுங்க.

குடிகாரம் பேச்சு விடிஞ்சா போச்சு னு கேலி செய்யுர ஒலகத்துல சில உண்மைகளை ஒங்க எல்லாருக்கும் தெரியனும்னு தான் என்னோட இந்த மேடைப் பேச்சு..
நாய் வித்த காசு குரைக்குமா?.... குரைக்காது. அதுமாதிரி தமிழ்நாட்டு பெருங்குடிகளாகிய எங்க மூலமா வர்ர இந்த வருமானத்தால, அரசாங்கத்துக்கு போதை ஏறுதா? இல்லை. இத நல்ல புரிஞ்சுக்குங்க.

இன்னும் ஒரு தத்துவத்த கேளுங்க.
போதை இந்த சரக்குல இருக்குன்னா, அதை தாங்கி இருக்குர இந்த பாட்டுலும், பொட்டியும் தள்ளாடனுமா இல்லியா? ஆனா தள்ளாடல. அதை சேல்ஸ் செய்யுற இந்த டாஸ்மார்க் தள்ளாடணுமா இல்லியா?. தள்ளாடல. இது எய்ல்லாம் ஸ்டெடியா, தள்ளாட்டமே இல்லாம இருக்கறப்ப, இந்த சரக்குல போதை இருக்குற மாதிரி ஒரு மாய்மாலத்த ஏன் ஏற்படுத்துறீங்க? குடிச்சுப்புட்டு வண்டி ஓட்டுனா பல கேஸ் போட்டு உள்ள தள்ளுனா எந்த விதத்துல ஞ்யாயம்?

தண்ணீரில்லா ஊர்களுக்கு தண்ணீ ஏற்பாடு செய்ய செலவு செய்ய பணம் எங்கிருந்து வருது? சரக்கு சேல்ஸ் செய்றதால வர்ர லாபத்துலதான்.
பள்ளிகூடங்களுக்கு கட்டமைப்புகளுக்கு தேவையான பணொம் எங்கேந்து வருது. இதோ இந்த சரக்கு சேல்ஸ் செஞ்சு வர்ர லாபத்துல இருந்துதேன்.

நீங்கள் இந்த சரக்கை எதித்து போராட்டோம் செஞ்சா, எங்களோட வயிறு எரியும். எங்க வயிறு எரிஞ்சு அதனால குளிர்காய்ஞ்சு ஒங்க வீட்டு அடுப்பு எரிக்க நினைச்சா நீங்க எல்லாம் மனுசங்களா? மனிதாபிமானம் இருக்குரவங்க அத செய்ய மாட்டாங்க!.

இனிவர்ர தேர்தல்ல, சரக்கு அடிக்கிற எங்களுக்குனு தனித்தொகுதி அமைக்க யாரு உறுதி தர்ராங்களோ, அவுங்களுக்கே எங்களோட வோட்டுங்கரத தெளிவா தள்ளாட்டமில்லாமெ தெரிவிச்சுக்கிறேன்.

இன்னு சில கோரிக்கையை இங்கே முன்வெக்கிறேன் கேளுங்க.

இந்திய குடியுரிமைங்கரது எங்களுக்கே பொருத்தமா இருக்குற ஒரு வார்த்த.
அதுனால, குடியுரிமை கெடைச்ச எங்களுக்கு எல்லாத்த்துலயும் முன்னுரிமை செஞ்சு கொடுக்குறது அரசாங்கத்தோட முதல் கடமை. அதனால என்னோட இந்த கோரிக்கைகளை முன் வெக்கிறேன்.
அது எல்லாத்தயும் அவசர நடவடிக்கையா நிறைவேத்தணுங்க்ர என் எதிர்ப்பார்ப்பையும் முன் வெக்கிறேன்.

இந்த நாட்டி குடியரசு தலைவரையே இந்தியாவின் முதல் "குடி" மகன் அப்படீன்னு சொல்றோம். அவரு எங்களுக்கெல்லாம் மூத்தவருனு அர்த்தம்.

அரசாங்கம் மிலிட்டிரி காரங்களுக்கு இலவசமா சரக்கு குடுக்குது. நாங்க காசு குடுத்து வாங்கி குடுக்குறோம்.

எங்க தொகுதியிலேந்து யாரும் செயிச்சு அமைச்சரானா, எல்லாருக்கும் இலவசமாவே குடுக்க ஏற்பாடு செய்ய ஒரு சட்டம் போடுவோம்.

"குடி"யுரிமைங்கரது நிரந்தரமாக்கப் படணும்.

அமெரிக்காவுல அஞ்சு வருசம் தங்கினா, அங்கெய் அந்த நாட்டு குடியுரிமை அட்டை குடுத்துட்ராங்க. இங்க வருசக் கணக்கா குடிச்சிக்கிட்டு இருந்தா கூட
"குடி" உரிமை அட்டை குடுக்க மாட்ராங்க

1. அதனால குடியுரிமை அட்டை வழங்கணும்

2. குடியுரிமை அட்டை வெச்சுக்கிட்டு இருக்குர எல்லாருக்கும் ட்ரெயின், பஸ்ஸூல எல்லாம், நாடு முழுக்க சலுகை நெறைய தரணும்.

3. வீடுகளுக்கு குடிதண்ணீ வசதிக்கு போராட்ர மாதிரி எல்லாம் நெலமை எங்களுக்கு இல்லாம, நாங்க எஸ்.எம்.எஸ், அனுப்ப்புச்சாலோ, போன்ல பேசினாலோ, எங்க வீடுகளுக்கே சரக்கு கொண்டு வந்து கொடுக்கும் முன்னுரிமை வசதி எங்களுக்கு வேணும்

4. தொகுதிகள்ல வாக்களிக்க தனிவசதி செஞ்சு தரணும். சரக்கு அடிச்சுட்டு வந்தா வோட்டு போடக்கூடாதுனு மறுக்குற அதிகாரிகள வன்மையா கண்டிக்கணும்.

5. ஆக்ஸிடெண்டுகளுக்கு குடிப்பழக்கம் காரணமாயிருக்குனு தெரிஞ்சா, நட்ட ஈடு கொடுக்குறதுல முன்னுரிம தரணும். அது எங்களுக்கு அரசு தர்ர கௌரவம் ஆமாங். ஆக்ஸிடென்டு செஞ்ச ட்ரைவருக்கு பதக்கம் கொடுக்கணும். மக்கள் தொகை குறையதுக்கு காரணமா இருக்குரதால.

6. வாரக்கணக்குலயோ, மாசக்கணக்குலயோ அதிக சரக்கு வாங்குற குடிமகன்களை கௌரவிக்கும் படியா, தேசீய மொதல் குடிமகன், மாநில மொதல் குடிமகன், மாவட்டத்தின் மொதல் குடிமகன் அப்படீங்கற மாதிரி பட்டம், பதக்கம் எல்லாம் கொடுக்கணும்,

7. பட்டம், பதக்கம் அடிப்படையில வசதியான வீடு கொடுக்கணும் அதுல முன்னுரிமைகொடுக்கணும் வீட்டு வாசலுல காவல் துறைய கௌரவப்பாதுகாப்பு வேலைக்கு போடணும்.

8. எங்களுக்கு தர்ர வசதிகள்ல இருக்குர குறைகளை அலசி ஆராச்சி செஞ்சு, சிபாரிசும் திருத்தமும் செய்ய, ஹ்யூமன் ரைட்ஸ் காரவுங்க அலர்ட்டா இருக்கணும்

9. எங்களுக்கு கெடக்குற வசதி எல்லாத்துக்கும் வரிச்சலுகை அளிக்கணும்.

அரசாங்கத்தை யாரும் கொறை சொல்லாதீங்க. ஏன்ன அவுங்க எல்லா எடத்துலயும் எழுதிப் போட்டு இருக்காக "குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு" அப்படீன்னு. அதுனால அரசாங்கத்து மேல எந்த குத்தமும் இல்ல.. அத நல்லா புரிஞ்சுக்குங்க..ஆமா....

இதுக்கு மேல பேசினா, குடிச்சுட்டு உளர்ரானு சொல்லிப்புடுவீங்க... அதுனால இத்தோட நிறுத்திக்கிறேன்.

நம்ம நாடு "குடி"அரசு ஆனது 26, சனவரி 1950.
அன்னிக்கு "குடி" ஆட்சி அமலுக்கு வந்துச்சு.

அதனால எல்லாருக்கும் "குடி" அரசு தின வாழ்த்து சொல்லிக்கிறேன் 26 சனவரிக்கு.

நன்றி

எழுதியவர் : மங்காத்தா (18-Jan-13, 9:45 pm)
பார்வை : 715

மேலே