மீண்டும் ஓர் சந்திப்பு.....

ஒரு வரி நீண்டு சென்ற எறும்புகள்
வாழ்க்கை எனும் வழி காண
வரைபடமான பணம் தேடி
பிரிந்து சென்றது ஒரு காலம்.....

பின் வந்த நண்பனின்றி
தனிமை உற்று தவித்தனவே,
தனிமையை ரசிக்கும் முனைப்போடு
தானாக பழகி கொண்டது ஒரு காலம்.....

பரந்து விரிந்த பாதையிலே
மீண்டும் ஓர் சந்திப்பு
துயில் களவு சென்றது அன்று
துணை இல்லா கதிரவனின் கதிர் தீண்டும் வரை
பணம் துணை இல்லை என புரிந்த காலம்
இன்று.................

எழுதியவர் : பொ.நகுல்சாமி. (20-Jan-13, 1:19 am)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 154

மேலே