தோய்ந்து பார்

கருப்புத்தாளில்
கருப்பு மையில்
கவிதை எழுத
கண்ணுக்குத்தெரியுமா?

வெள்ளைத் தாளில்,
எழுதாப்பாடல்
பாடமுடியுமா..?

சொற்கள் இடையில்
அமைத்த தூரம்
பாரம் ஆகுமா..?

மனதில் நிற்கச்
சொல்லும் வாக்கினுள்ளே
பொய்மை வேண்டுமா..?

கவிதையிலே
தோயும் மனங்கள்
தூய்மை தவறுமா..?

கவிதை ரசம்
அருந்திட விழைவோம்
அதில் கரைந்தின்பம்
கண்டிட முனைவோம்.

எழுதியவர் : minkavi (21-Jan-13, 12:06 pm)
பார்வை : 204

மேலே