கண்ணீர்!

ஏ! இயற்கையே!
நீயும் வானிலிருந்து பொய்த்தாய்!

(இல்லை இல்லை
இந்த வார்த்தையில்
”தாய்” வந்து
மனம் வெம்புகிறாள்
அதனால்)

ஏ! இயற்கையே
நீயும் வானில் இருந்து
பொய்யாகிப் போனாய்!
எமது பயிர்கள் வாடின!

அவற்றின்
நிலை கண்டு,
கண்ணீர் விட்டு
அவற்றை
வளர்க்க முயன்றோம்!
அதிலும்
வஞ்சம் செய்து விட்டாய்!

எங்களது கண்ணீரை
குறைவான அளவில்
படைத்து விட்டாய்!

சரி!
பரவாயில்லை!
கூடி மிகுந்து அழுது,
கண்ணீர் பெருக்கை
காவிரியாய்
விட நினைத்தோம்!

இதிலும் வஞ்சனையா?

அதன் சுவையும்
கடல் நீர் ஒப்பானதேன்!

எங்கள் பயிர்
கருகுவது மட்டும்தானே
இங்கு மிச்சம்!!

இந்த மனித குலத்திற்கு
அன்னமிட என்ன செய்ய!

எதுக்குமே உதவாத
இந்த கண்ணீர்
இருந்துதான் என்ன செய்ய?

இந்த கண்ணீரையும்
இயற்கையே
நீயே எடுத்துக் கொள்!

இனி
எதிர்பார்ப்பு இல்லாத
துடிப்பான
செயலாக்கம் மட்டுமே
எங்களுக்கு போதும்.

விடைகாண
நிச்சயம் முயலுவோம்.

இயற்கையே !
உன்னை
இறைஞ்சுவதை விட
இனி உன்னை
வெற்றி கொள்ள
வழிதேடியே தீர்வோம்!

எழுதியவர் : மங்காத்தா (21-Jan-13, 3:28 pm)
பார்வை : 149

மேலே