நயம் செய் கவிதை
கத்தும் கடலோரம்
செய்கவிதை நயம்கூட்டி
கரையோர நண்டினம் போல்
குளக்கரையில் புள்ளினம்போல்
புறம் திரிந்து உவந்துலவி
விண்ணில் மிதப்பதுவாய்
மகிழ்வடையும் இக்கணம்.
கவிதை இரசம்
பருகியதன் ஆனந்தம்
உணர்ந்த பொழுதில்
அது பரவசம் பரவசம்..!