manam.
சிதறாத மனம், சிறப்பான தனம்!
மனமே என்னிலைக்கும் ஏற்பாடு செய்கிறது.
தன்னிலை விளக்கமோ, அல்லது முன்னிலை முழக்கமோ,
மனமே பின்னின்று நடத்துகிறது.
சுபாபக் காற்றால் சூட்சுமம் மறந்து,
மேல்நிலை, கீழ்நிலை, தாழ்நிலை எல்லாம் கண்டு,
தன்னிலை மறந்து, தன்னையும் மறந்தது.
தன்னை மறந்த அக்கணத்தில்
பொன்னைக் கண்ட புத்துணர்வு!
"என்னை இத்துணை காலம் மறந்தேன்"!
"இதுவன்றோ நான்! இதுவன்றோ நான்!"
"பொதுவன்றோ நான்! பொன்னன்ரோ நான்!"
சுபாபம் என்னை சுருட்டிக்கொண்டு போயிற்றோ?
சுதந்திரமற்ற இருட்டில் நான் சுகமாய் இருந்திருக்கிறேன்!
சுகமெனக் கண்டதெல்லாம் சுபாபத்தின் சொக்குப்பொடி!
சுபாபத்தின் சுதந்திரத்தில், சுயமெல்லாம்..
கயமாக...பயமாக.....நயமாக.......எத்தனையோ வடிவெடுத்து,
முடிவில் சுபாபம் சுதந்திரம் இழந்தபோது,
சுயம் சுதந்திரம் அடைந்தது.
சுயத்தின் சுதந்திரம், சுகத்தின் சூட்சுமம்!
அகத்தில் சுதந்திரம், அனகத்தில் ஆட்சி!
பாலு குருசுவாமி