உன் வசம் நான்

நீ ...

தொடுவாய் என்றுதான்
அருகில் வந்தேன் ..
தூரமாய் போனாய்..!

தருவாய் என்று தான்
யாசகித்து நின்றேன் ..
வெறும் பாத்திரத்தை
வீசி எறிந்தாய் ...!

வருவாய் என்றுதான்
வாசலில் நின்றேன்
விலாசமில்லாமல்
விலகிபோனாய் ...!!

மலர்வாய் என்று தான்
மகிழ்ந்து கிடந்தேன் ..
மறைவாய் எங்கோ
மறந்து போனாய் ...!!

விடலாம் என்று தான்
விலகி வந்தேன் ...
தொடலாமென்று
தோளில் சாய்ந்தாய்..

வரட்டுக் கோபம்
வேண்டாமடி ..
உன் வசம் நான் கண்டுபிடி ???

எழுதியவர் : அபிரேகா (22-Jan-13, 5:36 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : un vasam naan
பார்வை : 97

மேலே