எழுதப்படாத பெண்மையின் தீர்ப்புகள்!
என்ன நினைத்தாய்
பெண்மையைப்
பற்றி !
பார்வைகளின்
வீரியங்கள் தான்
எங்களின்
எல்லைகளா ?
குங்குமங்களும்
மெட்டிகளும்
தலைகுனிந்த
நளினங்களும் தான்
எங்களின் கவசங்களா?
கை நீட்டி தட்டிக்
கேட்டதற்காகவா
கண்ணகியின்
சிலை கூட
காணாமல் போனது ?
நெருப்பில் இறங்கித்
தான்
நீருபிக்கிறோம்
எங்களின் கற்பைக்
கூட!
மனிதத்தை
காப்பாற்ற போராடாதீர்கள்
மானிடரே
முதலில் பெண்மையைக்
காத்திடுங்கள்!