திருநங்கை(உங்களுக்கு என் கேள்விகள்)

அரவாணிகளுக்கு சமர்ப்பணம்

சமுகத்துக்கு என் கேள்விகள்....

இறைவன் திருநங்கை உருவெடுத்த போது
கை கூப்பி வணங்கிய நம் கைகள்
திருநங்கை உருவெடுத்த இவர்களை மட்டும்
கை கொட்டி சிரிப்பது ஏன் - (உங்கள் பதில்)

பெண்ணுக்கு சமஉரிமை பேசுகின்ற என் தேசமே
இவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட
கிடைக்க வில்லையே அதை கேட்க
மறந்தது ஏன் - மறுத்தது ஏன் - (உங்கள் பதில்)

இவர்கள் சமுகத்தில் இருந்து ஒதுக்க
பட வேண்டிய கல்லறை பூக்களா இல்லை
நாம் கையேந்த பட வேண்டிய
கருவறை பூக்களா - (உங்கள் பதில்)

மனித இனத்தை காக்க ஆயிரம்
சாதி கட்சிகள் பிறந்தது ஆனால் ஏனோ
இந்த மனிதர்களை - மனிதர்களாக ஏற்க்க
மட்டும் மறுத்தது

சிறுபான்மை இனத்துக்கு இட ஒதிக்கீடு
அவசியம் தான் - இவர்களும்
சிறுபான்மை இனம் தான்.
(இவர்களும் சிறுபான்மை இனம் என்பதையே
மறந்து விட்டோமே ஏன்)

பகலில் அருவெறுக்க படுபவர்கள்
இரவில் மட்டும் படுக்கையில் அணைக்க(விபச்சாரம்) படுவது ஏன்

என்களால் இவர்களை அலைகிறோமே (9)
இவர்களும் நம் எண்ணிகையில் ஒன்று என்பதை
எப்போது உணர போகிறோம்

அருவெறுத்த நம் கைகள் இவர்களை
அரவணைக்கும் நாள் எப்போது (உங்கள் பதில்)

அலி என்ற சொல்லை - தமிழ் அகராதியில் இருந்து
அளித்திடும் நாள் - எப்போது (உங்கள் பதில்)

இனி இருபாலரும் (ஆண், பெண்) என்பதை விடுத்து
மூப்பாலரும் (ஆண், பெண், திருநங்கைகள்) என்று சொல்லும் நாள் - எப்போது (உங்கள் பதில்)

கூடி வாழ உறவுகள் மறுத்ததால்
தெருவில் குத்தாடும் இவர்களை
நம் கைகள் அரவணைக்கும் நாள் எப்போது

- என் கேள்விக்கு உங்கள் பதிலும் எப்போது ?

எழுதியவர் : Madhans88 (22-Jan-13, 7:12 pm)
சேர்த்தது : Madhans88
பார்வை : 134

மேலே