உன்னை போல் ஒருவன் ...!!!
சிட்டுக்குருவியின் சிறகையும் தாங்கிடும்
துணிவில்லா என் இதயம் அதற்க்கு
சிகரத்தையும் விட உயர்ந்த காதலினை
சுலபமாய் சுமக்க செய்தவனே !
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலைக்கே
சொடுக்கிட்டு சவால்விட்டவளாய்
சுற்றிவந்த சுதந்திர சுந்தரி நான்
என் சுவாசத்தை கூட சிறையறைந்தவனே !
முத்துமுத்தாய் மொட்டுவிட்டு கொத்துகொத்தாய் மலர்ந்திட
சுத்தமான என் மனதில் எத்தனையோ ஆசையிருக்க
அத்தனைக்கும் அற்பமாக ஆசைபடாமல்
அத்திப்பூ பூத்ததுபோல மனம்பூத்த ஒத்தை ஆசையே !
ஏ, நிலவே ! நீ என்றால் எனக்கு ஆசையோ நிறை
உன் தொலைவினை தவிர வேறு பெரிதில்லை குறை
எவர் அடித்தாரோ தெரியவில்லை என் குறையினை பறை
உயிர்க்காதலியின் சிறு மனக்குறையும் தீர்ப்பதன்றோ முறை
இதோஇதோ என் குறையதை போக்க என் காதலன்
உன்சாயலிலே,காதல் பரிசாய் எனக்களித்த எங்கள் உயிர் பிறை !