நேசிக்கும் நெஞ்சத்தின் வாழ்த்து
பிறப்பு ஓரிடம்
வளர்ப்பு எவரிடம்
பிழைப்பு எவ்விடம்
வாழ்க்கை எவ்விதம்
பிணைப்பு எவருடன்
இறப்பு எதனுடனோ
மறுநொடி பூக்கும்
மர்ம முடிச்சின்
வியப்பின் எல்லையை
விரும்பி யாவரும்
விரட்டி சென்று
சுமக்க நினைப்பதில்லை
வைகறை பொழுதில்
கதிர்பரப்பும் கதிரவனை
காணும் போதும்
பசும் புல்லில்
படுத்துத் தூங்கும்
பனித்துளியுடன் மெய்சிலிர்க்கும்
தென்றல்காற்றை உணரும்போதும்
வட்டமிடும் வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்களோடு கூவும்
குயிலின் குரலோசை கேட்கவும்
உயர்ந்தோங்கிய மலையும்
மலைமுகட்டில் மேகமும்
மேகத்தைகண்ட மயிலும்
வண்ணமயிலின் நடனத்தை காணும்போதும்
எல்லையோரகடலும்
ஆயிரம்கைகள் கொண்ட
அழகிய மரக்கிளையும்
கேலி பேசிசிரிக்கும்
மரஇலையும்
நெருப்பின்றி புகைவரும்
அதிசய நீர்வீழ்ச்சியும்
உருகும் மெழுகாய்
உருண்டோடும் அருவியும்
உயரப் பறக்கும்
இரட்டைவால் குருவியும்
மழையில் நனையாமல்
குடைபிடிக்கும் காளானும்
தன் அழகை
வெளிப்படுத்தும் தாமரையும்
ஆகாயத்தின் பொட்டான
நிலாவினையும்
அல்லியைபோல் காட்சிதரும்
விண்மீங்களையும்
கொஞ்சிபேசும் மழலையுமென
இயற்கையின் அழகினை
இமைக்காமல் ரசிக்கவும்
இன்பத்தின் எல்லைகளை
மறக்காமல் சுவைக்கவும்
எவரும் மறுப்பதில்லை
பூத்து குலுங்கும்
பூக்களின் மகிழ்ச்சி
விழாமல் தாங்கும்
காம்பின் வலியென
புரிந்த எவரும்
பூக்களை பறிக்க போவதில்லை
விதியின் வலியைவிட
பிரிவின் வலி
மிககொடுமை இனியேனும்
யாருக்கும் கொடுக்காதே
விதியின் வலியைதான்
எவராலும் விளக்கிடமுடியாது
உன்மனதை?
நமக்குள் ஒளிமறைவு
ஒருபோதும் கூடாது
நட்பு பொய்யல்ல
என்ற உண்மையை
நீ அறிவாய்
அறிந்தும் அறியாததுபோல்
உறவுகளை அலைக்களிதது
உருக்குலைத்து விடாதே
இனிவரும் காலங்களில்
கொள்ளை இன்பம் பூத்திட வேண்டும்
வெள்ளை மனமென்ற நந்தவனத்தில்
வாழ்க்கையின் இன்னல்கள் மறந்து
புன்னகை பூத்திட என் இதயம் கனிந்த
வாழ்த்துக்கள்