............நீயும் நிலவே.............

இருளின் முழுமையில் பதுங்கி ஒதுங்குகையில்,
எதற்காக நீ வாய்விட்டு சிரிக்கிறாய் ?
தேவையா இங்கே உன் புன்னகை மின்னல் ?
ஏற்கெனவே உன் விழியொளி பார்த்து,
விண்மீன்களுக்குச் சந்தேகம் வந்திருக்கும்........
மொட்டைமாடி ஒரு ஆபத்தான அந்தரம் அன்பே........
அங்கே நீயும் எனக்கு நிலவு வேடம் தரிப்பவள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Jan-13, 9:12 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 82

மேலே