காலை வேலை

மார்கழி மாத குளிர் பணியில்
சொர்கமான துயில் விழித்து
கம்பளியும் கனவும் கட்டி இழுக்க
கலைந்த ஆடையை உரிய இடம் சேர்த்து
சோம்பல் சூரியனுக்கு முன்னமே சுறுசுறுப்பாய் எழுந்து,
பன்னீரும் ரோஜாவும் ஒன்றிணைந்த உவமைக்கு இணையாய் முகம் கழுவி
வாசலின் குப்பைகள் துடைபத்திடம் அடிவாங்கி ஓடிட
சாணமும் நீரும் அங்கே குடிபுகுந்திட
கட்டை விரழும் ஆள்காட்டி விரழும் மாக்கோலம் தூவிட
வந்த ஓவியம் ரங்கொலியாம்-அதன்
நடுவே உச்சி பூ பிள்ளையார் அமர்ந்திட
பெருமிதமாய் ரசித்துவிட்டு மீண்டும்
கம்பளி கனவை தொடர்ந்தாள் என் நிலா ........

அன்புடன் " தங்கதுரை"

எழுதியவர் : Thangadurai (25-Jan-13, 12:24 am)
சேர்த்தது : thangadurai
பார்வை : 281

மேலே