இல்லாமல் இருந்திருக்கலாம்

இல்லத்தில்
இணையதளம்
இல்லாமல்
இருந்திருக்கலாம்.

உள்ளத்தில்
கவிதை மேல்
காதல்
கொள்ளாமல்
இருந்திருக்கலாம்.

எழுத்து.காம்
என் கண்ணில்
படாமல்
இருந்திருக்கலாம்.

எனக்கும்
கவிதைகள்
எழுதவராமல்
இருந்திருக்கலாம்.

என் பார்வையில்
உன் படைப்புகள்
விழாமல்
இருந்திருக்கலாம்.

உன் நட்புவட்டத்தின்
உள்ளே நான்
நுழையாமல்
இருந்திருக்கலாம்.

நம் நட்பு
ஆழமாய்
வேரூன்றாமல்
இருந்திருக்கலாம்.

இவை எல்லாம்
நடந்திருந்தாலும்.

நம் உறவில்
பிரிவு இல்லாமல்
இருந்திருக்கலாம்.

இத்தனை
''இல்லாமல்
இருந்திருக்கலாம்''
இருந்தாலும்

ஒன்று மட்டும்
இருந்திருக்கலாம்

உன் பிரிவை
தாங்கும்
உள்ளம்.

எழுதியவர் : hujja (25-Jan-13, 7:39 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 246

மேலே