தடத்தை மாற்றும் தடயங்கள்

நேரான வழியில்
நெஞ்சை நிமிர்த்தி
நெடுந்தூரப் பயணம் ஒன்று
சீரான வேகத்தில்
சிறப்பாக செல்லும் தருணத்தில்
சிற்சில தடைகளைக் கண்டு
சீற்றங்கள் வருதே
மாற்றங்கள் எழுதே
ஏற்றங்கள் தருமா இப்பயணம்
தடையென்ன வந்தாலும்
தடம் மாறிச் சென்றாலும்
நடை போடச் சம்மதம் தருமா உள்மனம்
சிரம் வீழும் என்றாலும்
நெஞ்சுரம் குறைந்து போகாதே
அறம் என்றும் மாறாதே
உரம் போட்ட எண்ணத்தில்
வழியெங்கும் பள்ளங்கள்
நெஞ்சைக் குத்தும் முட்கள்
காலைச் சுற்றும் பாம்புகள்
தடங்களை மாற்றும் தடயங்களாய்
அற்பமே இந்த உலகம்
அதிலும் சொற்பமே இப்பயணம்
அற்பத்திற்கும் சொற்பத்திற்கும்
விற்பனையாமோ இந்த ஞானம்?