பாலியல் வன்கொடுமை

பள்ளி செல்லும் சிறுமி இவள்....
பிறந்து வளர்ந்து...
பச்சிளம் வயது கடந்தவுடன்...
காமுகர்களின் கண்களுக்கு பெண்ணுறுப்புகள் கொண்ட பொம்மையாகவே தோன்றுகிறாள்...!
அறிந்த மனிதர்கள் உருவத்தில் வந்து...
அறியாச் சிறுமியின்..!
அங்க உறுப்புகள் சீண்டி ஆனந்தம் கொள்ளும் அயோக்கியர்களிடம் தப்பி...!
பள்ளிக்கோ வெளியிலோ சென்றால்...!
அங்கும் சில கொம்பில்லா அரக்கர்கள் இவளைச்சீண்டி காமதாகம் தணிக்க காத்திருக்கின்றனர்...!
விழியிலே வழியும் கண்ணீரும்...!
தன் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத பலவீனமும்...!
நடந்ததை விவரிக்க முடியா அறியாமையும்...!
அந்த அரக்கர்களின் பலங்களாகி...
இவளை பாழாக்குகின்றன...!
வறுமையின் கொடுமையால் வயிற்றுப் பிழைப்புக்காய் வேலைக்குச் சென்றால் அங்கு வயோதிக-இளைஞர்களும்(!) தன் வாலிபத்தை சோதனை செய்திட...
இவளை வீழ்த்த.. வஞ்சகமாய் வலை விரிக்கின்றனர்..!
பள்ளி செல்லும் வயதில் ஆரம்பமாகும் சீண்டல்கள்...
உடல் அங்கங்கள் தளர்ந்து...!
பாட்டியாகும் வயது வரை தொடர்கின்றன..!
கடந்த காலத்தின் சோகங்களையும்...!
எதிர்காலத்தின் பயங்களும் ஒருசேர வெறித்துப் பார்க்கிறாள் இவள்...!
துணிவாய் வெகுண்டெழு...! பெண்ணே... முகமூடிக்குள் வாழும் வன்கொடுமை அரக்கர்களின் முகத்திரை கிழித்திடு...!
பின் சமுதாயம் அவர்களைக் கரும்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றிடும்..!
உனக்கான வளமான..
சுதந்திரமான எதிர்காலம் உன் மனோதைரியத்தால்
வெளிப்படும்...
ஒற்றை வார்த்தையில்
உள்ளது...!
புயலாய் புறப்படு...!
பூக்களைப் பறிக்க முயன்றால்..
அதன் முட்கள் குத்தி ரத்தம் சிந்த நேருமென..
அச்சப்பட வைத்திடு..!
உன் வரலாறு படித்து
அரக்கர்கள் பயந்து...
அடுத்த தலைமுறை சிறுமிகளாவது ஆனந்தமாய் சுதந்திரமாய் பவனி வரட்டும்...!

எழுதியவர் : ராஜதுரை (25-Jan-13, 6:12 pm)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 203

மேலே