நான் புதுமையானவன்
நான்
புதுமையானவன்
புரட்சியானவன்
இனிமயானவன் - என்றும்
இளமையானவன்
உண்மையானவன்
உயிருமானவன்
தமிழுமானவன்
தாயுமானவன்
நான்
உண்மை சொல்லி
அழிந்த்ததுண்டு
உறவுகள் என்னை
வெறுத்ததுண்டு
பொய் நான்
சொல்வதில்லை
தவிர்த்ததுண்டு
என் கை பட்டு
எந்தப் பெண்ணும் கலங்கியதில்லை
என் கை பறித்து
எந்த மலரும் கருகியதில்லை
என் கை கோர்த்த
எந்த நட்பும் சோர்ந்ததில்லை
என் கை காட்டி
எந்த உயிரும் அழிந்ததில்லை