அரசியல் வாதி விட்டெறிந்த எச்சில் பொட்டலம்

ஏழையின் வீட்டில்
எளிய விடிவெள்ளி
இரவு வானில் ஒரு நட்சத்திரம்

அங்கும் வறுமையோ....?!

ஆறுதலாய் அடித்தது தென்றல்....

அடிக்காதே பசிக்கிறது என்றான்

அவன் விழிகளில் கண்ணீர்.....

அங்கே விரைந்து சென்ற காரிலிருந்து

அரசியல் வாதி விட்டெறிந்த எச்சில் பொட்டலம்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (26-Jan-13, 10:16 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 447

மேலே