முகமூடி மனிதர்கள்

இரவெல்லாம் குடிப்பார்-பொய்களால்
பல தலைகளில் பன்னீர் தெளிப்பார்
மனதினில் வஞ்சனை நெருப்பேற்று
முகந்தனில் வாஞ்சையை காட்டுவார்
நாயகன் ஒருவனை மறந்து
நாடகமாடி திரிவார்!
பொழுது புலர்ந்ததும் புண்ணியம் தேடி செல்வார்!
மொட்டை அடிப்பார் குளித்து நெற்றியில்
பட்டையும் இடுவார்....
கஞ்சிக்கு கையேந்துவோரை ஏசிவிட்டு தன்
கருவூலத்துக்கு பலம் கூட்ட யாசிப்பார்
நினக்கும் ஒரு பங்கென பரம்பொருளே
நின்னையும் ஏமாற்றுவார்!

வித்தைகள் காட்டும் வியாபாரிகள்
வரலாற்றை இழக்கும் வருங்காலங்கள்
நெறிகளை மறந்த நியாயவாதிகள்
உழைப்பினை உதறும் தொழிலாளிகள்
தன்னலமாய் சுரண்டும் தலைவர்கள்
இவையாவும் கண்டும் குருடர்களாய்
மக்கள் என்னும் ________________?

எழுதியவர் : மொழியினியாள் (27-Jan-13, 10:55 am)
பார்வை : 315

மேலே