வெற்றி தோல்வி
வெற்றியிடம் தோற்கிறேன்
தோல்வியிடம் ஜெயிக்கிறேன்
தோல்வி நண்பனாகிறான்
வெற்றி எதிரியாகிறான்
ஒதுக்க ஒதுக்க தோல்வி நெருங்குகிறது
பிடிக்க பிடிக்க வெற்றி ஓடுகிறது
வெற்றியின் மீது காதல் கொண்ட
எனக்கு தோல்வி அத்தைமகளாகிறாள்
வெற்றி தங்கையாகிறாள்
்
அடித்தாலும் உதைத்தாலும் என்னுடனே இருந்து கொள்கிறது
தோல்வி....
கெஞ்சினாலும் கொஞ்சினாலும்
என்னை விட்டு விலகுகிறது
வெற்றி....
எனது படைப்பின் போது தோல்வி
தோள் கொடுக்கிறான்
வெற்றி பயந்து ஓடுகிறான்
்
ஓடு வெற்றியே ஓடு
எவ்வளவு தூரம் ஓடுவாய்
இருந்தாலும் விடமாட்டேன் விடாமுயற்சியை கை விடமாடேன்
உன்னை அடையும் வரை..........