உண்மையான காதல்
ஆண் - பெண் இருவரும்
ஒருவரை ஒருவர் விரும்புவது
காதல் அல்ல...
காதல் என்பது உணர்வுகளின்
பங்கீடு
இதயங்களின் மாற்றீடு..
நீ காதலிக்கின்றாயா?
அவளின் அழகை பார்க்காதே
அவளின் அறிவைப் பார்க்காதே
அவளின் சொத்தைப் பார்க்காதே
அவளின் மனதைப் பார்...
காதல் புனிதமானது
நீ ஒருவளைப் பார்த்தவுடன்
இவள் தான் உன்னவள் - என்று
ஒரு நொடிக்குள் அடையாளங் கண்டு
மனதுக்குள் அவளை அரங்கேற்றி
விடுவது தான் காதல்...
காதலில் பல வகை உண்டு
பருவக் காதல் - காலம் சென்றதும்
மறந்து விடும்
கல்லூரிக் காதல் - கல்லூரி
முடிந்தவுடன் பறந்து விடும்
வாலிபக் காதல் - விளையாட்டுடன்
முடிந்துவிடும்
காலம் கடந்தாலும்
பெற்றோரே எதிர்த்தாலும்
உண்மைக் காதல்
வாழ்ந்து கொண்டே இருக்கும்
எப்போதும் ஒருதலைக் காதலாக
அல்ல
ஓரிதயக் காதலாய்..