எய்ட்ஸ்
நீ நீயாக இருந்தால்
நான் நானாக வருவதில்லை
நீ நீயாக இல்லை
நானாக நானானேன்.
உனை நான் காண
எண்ணியதுமில்லை
உனை நான் அழிக்க
தோன்றவுமில்லை.
எனக்குள்ளும் ஒரு வருத்தம்,
நீ செய்யும் தவறால்
பச்சிளம் குழந்தைக்குள்ளும்
நான்.
ஒருவருக்கு ஒருவராய்
ஒழுக்கம் நீ கொண்டால்
மருந்தே தேவையில்லை
தானே நான் அழிவேன்.
வாழ்கை ஒன்றெண்டு
ஒருவரே போதுமென்று
காமம் தொலைத்தால்
வாழ்கை வளப்படும்.