தமிழ் மொழி வாழ்த்து

இனிமை மொழிகள் பேச
செம்மை இலக்கியங்கள் வாழ
மேன்மை மொழிகள் பழக
தொன்மை மொழியில் இனிக்க
பெருமை பெற்று விளங்கிட
வாழ்க தமிழ் !வாழ்க ! என்போம் !

தேனினிக்கும் சொல்லாய்
சொற் தேரில் பவனிவர
ஊர் முழுதும் சிறக்க
பார் முழுதும் போற்ற
வாழ்க தமிழ் !வாழ்க ! என்போம் !

ஊனிற்கும் உயிருக்கும் உயிர் மெய்
ஐம்பொறியும் ஒளியாய் விளங்கிட
சிந்தைக்கும் மதியென
விந்தைக்கும் வெளிச்சம் வர
வாழ்க தமிழ் !வாழ்க ! என்போம் !

ஆற்று நீர் போல
நாற்றுக் கால்கள் போல
சிறப்புடனே வளம் பெற
ஏற்றத்தோடு ஏற்றமாய் வளர்ந்திட
வாழ்க தமிழ் !வாழ்க !என்போம் !

விண்ணுலகம் தொழுதிட
மண் பாத மலர்கள் பணிந்திட
நன்மை பல பெற்றிட
பன்மை உயிர்கள் செழித்திட
வாழ்க தமிழ் !வாழ்க ! என்போம் !

எழுதியவர் : ஜெய ராஜ ரெத்தினம் (28-Jan-13, 3:12 pm)
பார்வை : 416

மேலே