நட்பு
பேதமின்றிப் பழகினோம்
பகிர்ந்து கொண்டோம்
இன்பத்தை மட்டுமல்ல
துன்பத்தையும்
குறைகளைப் பொறுத்துக் கொண்டோம்
நிறைகளால் பூரிப்பு அடைந்தோம்
விட்டுக் கொடுத்தோம்
பெற்றும் கொண்டோம்
வண்ணத்துப் பூச்சியைப்போல அழகாய்
சிறகடித்துப் பறக்கிறோம்
நட்பு என்னும் வானிலே........