பழி வாங்கிய குழி
ஓர் உயிருக்காக
இன்னொரு உயிர் சென்றது.
பாறைக் குழியா ?
உயிர் பலி வாங்கும் சவக்குழியா ?
குழந்தையைத் தேடிக் குதித்தான்.
கிடைத்ததோ உடல்;
பயனில்லை.
பிறகு,
காப்பாற்றிய உயிரைக் காணவில்லை,
கவனிக்க மறந்தனர்,
பரபரப்பில், பதற்றத்தில்.
திடுக்கிட்டுத் தேடினோம்
தேடினோம்
கிடைத்தது அசைவற்று…..
(இன்று என் வீட்டருகில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு).