உன் உயிர் மூச்சாக - தமிழ்
விழுந்த மரம் எழுந்ததடா
வேரின்றி - நீ
அழித்தக்காடும் முளைத்தடா
நீரின்றி
களைந்தக்கூடும் சேர்ந்ததடா
ஒரு நாரின்றி
களைத்த உன்னை அறுக்குமாடா
ஒரு வாளின்றி
தமிழ் சுமந்த குழந்தைகளை
புதைத்து விட்டதாய்
நினைத்துவிட்டாய்
விழுந்தது விறகல்ல
விதை என்பதை மறந்து
தழை தழைக்க உரமாகும்
உயிர் வாழா
தமிழ் என்றும் மருந்தாகும்
நம் உயிர் போக
கொண்டாடுவோம் உள்ளங்களை
கொடுத்தள்வோம் எண்ணங்களை
திண்டாடட்டும் பஞ்சங்களும்
தேடியளையட்டும் அதன் சொந்தங்களும்
பண்பாட்டை பயிரிடுவோம்
பகுத்தறிவை அறுவடை செய்வோம்
உறவுகள் நீளட்டும்
சாதிகள் அழியட்டும்
இருவரி குறளாய் வாழ்ந்து பார்
இருளும் பகலும் புரியும் - அதன்
ஒருவரி பொருளாய் இருந்து பார்
உறவின் பிரிவு குறையும்
புவி முழுதும் போறிடுவாய்
மத ஒற்றுமை வளர்ந்திடவே
கோடை காற்றும் குளிர்ந்ததட
கொண்டை மயில் கவிபாட
உன்புன்னகையில்
மொழிகள் அனைத்தும்
சங்கமிக்கட்டும் - உன் உயிர் மூச்சாக........