காளானின் மகத்துவம்

சர்க்கரை நோய்க்கு சிறந்தது காளான் ...

சர்க்கரை நோய் உள்ளவர்கள் காளான்களை (mushroom ) உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் அதில் சர்க்கரை இல்லை என்கிறார் ஒரு நிபுணர். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழக உயிர்விஞ்ஞான துறை பேராசிரியரான டி .என் ..லக்கன்பால் இதனை தெரிவித்துள்ளார் .
நன்கு பயிர் செய்யப்பட காளான்கள் ,காட்டுப் பகுதியில் விளையும் காளான்கள் கூட உட்கொள்ளத் தகுதியானதே. ஏனெனில் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முக்கியமான ஊட்டச்சத்து மூலகங்கள் அதில் உள்ளது.குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கவலைப்படவேண்டியதில்லை. காளானில் (மஸ்ரூமில்) சர்க்கரை இல்லை என்று கூறுகிறார் அவர். 100 வது விஞ்ஞான மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கொழுப்பு இல்லாததால் காளானால் உடல் பருமனும் ஏற்படுவதில்லை. தற்போது காளான் தாவரவியல் (பயலாஜி) என்ற துறை வேகமாக ஒரு ஆய்வுத்துறையாக வளர்ந்து வருகிறது என்கிறார் லக்கன்பால் .
மேலும் புற்றுநோய் ,எச்.ஐ.வி ஆகிய பயங்கர ,கொடிய நோய்களுக்கான தீர்வும் காளானில் இருப்பதாக அவர் தெரிவித்தார் .காளான் மருத்துவ பயனில் சிறப்பானது மட்டுமின்றி பொருளாதார பயனும் கொண்டது. .காளான் வளர்ப்பு ஒரு குடிசைத் தொழிலாக செய்யப் படவேண்டியதே .

எழுதியவர் : ஜெயா ராஜரத்தினம் (3-Feb-13, 11:26 am)
பார்வை : 152

சிறந்த கட்டுரைகள்

மேலே