தொட்டாச்சிணுங்கி,,,,

தொட்டாச்சிணுங்கி,,,,
கறுகுமணி கோத்தவளே
கடுகுபோல வெடிச்சுப்புட்டே
கலங்கிடுச்சு எம்மனசு
கருகிநின்னே காத்துநின்னே
கட்டுக்கடங்கா காட்டுப்புலி
கருங்காலி சிறுத்தப்புலி
கயிறுபோட்டு இழுத்தென்ன
கட்டுக்குள்ளே அணச்சிப்புட்டே
கழுதபோல சொமையிருக்கு
கருவாச்சி நெனப்பிருக்கு
கருவாடு கொளம்புக்குள்ள
கவுந்துப்புட்டே பாருடிபுள்ள
கசையடிச்சு தொறத்துனாலு
கடைசிவர தொணையிருப்பே
கருப்புசாமி கோயில்முன்னே
கர்பூறமடிச்சு சொல்லுறேண்டி
களத்துமேட்டு தோட்டத்துல
கரும்பு திருடி பார்த்தப்பல்லாம்
கற்பூரவல்லி கண்ண வச்சு
கனலெரிக்கும் பார்வை பார்த்தே
கடத்திப்போக நாள்பார்த்து
கணக்குப்போட்டு நாங்கெடக்க
கல்யாண சேதி சொல்லி
கலக்கிபுட்டே கரும்பயல
களையா நீ பார்த்தநேரம்
கருப்புகூட வெள்ளையாச்சு
கசப்பாக்கெடந்த ராத்திரியு
கனவாலே பொறளுதடி
கத கதயா அளந்திடவு
கவிதபாடி காதல்செய்யவு
களவாணி நெனப்புக்குத்தா
கட்டிபோட்டாலு வெளங்கலயே
கருப்பட்டி வெல்லங்கணக்கா
கரையுதடி யே உசுரு,,, ஊ
கறுத்த வளை சில்லெடுத்து
கருணக்கொல செஞ்சிப்புடு,,
அனுசரன்,,,