...........கூப்பிடு.........

எது உகந்த நேரம் அவளை அழைக்க ?
என்று யோசித்தபடி கைபேசியை,
ஈரமாக்கிக்கொண்டிருந்தது வியர்த்த விரல்கள் !
யோசனை யோசனை யோசனை !
உன்வீட்டு சூழ்நிலை தெரியாமல் !
சுழன்று சூழ்கின்ற உன் நினைப்பை,
எப்படி அடக்கிவைப்பது ?
நீ அனுப்பலாமே ஒரு குருஞ்செய்தியாவது !
அடேய் நான் அகப்பட்டிருக்கிறேன் என்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Feb-13, 9:02 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 96

மேலே