கடலோர கவிதைகள்...
உன்னைத் தழுவும் பேராவலில்
கரை வந்து சேரும்
கடல் அலைகள்
உன்
பேரழகின் பிரமிப்பில்
காலடியில் மண்டியிட்டுத் திரும்பும்...
கடற்கரை
ஈர மணல் வெளியில்
குட்டி குட்டிப் பூக்கள்...
உன் காலடி தடங்கள்!
நான் அலையாகித் தழுவுகையில்
நீ குறு மணலாக நழுவுகிறாய்...
ஓயாத அலைகளின் ரீங்காரம்
உன்
சிரிப்பு சத்தங்களின்
சிறு சேமிப்பு...
கரை நீ
அலை நான்
நம் காதல் கடல்..