தென்றல் தன் வரலாறு கூறுதல்...

பர்வதத்தின் சாரல் ...
பாதை நெடுகிலும்
பனியின் ஈரம்...
கனியின் சாரம்...

நாசி தொட்டு
நழுவி சென்றதனிடம்
யாரது
என்றந்தன் கேள்விக்கு
சற்று நின்றே பதிலுரைத்தாள்..

நான் தான் தென்றல் தேவதையாள்!

நன்றி தாயே...
நவிலுக
நின் வரலாறேன்றேன்...

பொதிகை தாய் என்றாள்...
வாயுவின் செல்ல சேயென்றாள்...
வழி பயணம் வெகுதூரம்
வருகிறேனேன்றவள் சென்றாள்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (4-Feb-13, 10:22 pm)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
பார்வை : 234

மேலே