அவசர யுகக் காதல்...!

தவறிய அழைப்புகளால்
அறிமுகமாகி
குறுஞ் செய்திகள் மூலம்
வாழ்த்துகள் பரிமாறி
மின்னஞ்சல் கடிதங்களால்
காதல் வளர்த்து
முக நூல்களில்
முகங்கள் பார்த்து
இணைய தளங்களில்
இதயங்கள் ஒன்று கூடி
பத்திர அலுவலகத்தில்
பதிந்த
திருமணச் சான்றிதழ்
பத்திரமாக
இருக்கிறது
விவாகரத்து கோரிய
வழக்கின்
ஆவணங்களில்...

எழுதியவர் : முத்து நாடன் (4-Feb-13, 11:02 pm)
பார்வை : 174

மேலே