மேகவானம்

நீயும் நானும் ஓடிப் போகலாம்
வாயென கூப்பிட்ட வானத்திடம் சொன்னது மேகம் வேகமாய் ஓடியதால் தேகமெலாம்
நோகுதே கொஞ்சம் நில்லேன் தாய்மடி
தந்த நீரை கொடுத்துட்டு வருகிறேன்

தாகமாகி தவித்த மண்ணுக்கு சோகம்
தீர்க்க வேண்டி நீகொடுத்த நீர்தானே
காட்டியது உங்காதலை என்னிடம்

அதுகேட்டு காதருந்த மேகம் மேற்படி வானிசைந்த மதன பாடல் கேட்க
மேலும் நாணம் இல்லா தோடியது

எழுதியவர் : guru (4-Feb-13, 11:46 pm)
சேர்த்தது : குருநாதன்
பார்வை : 113

மேலே