சேமித்த முத்தங்கள்
வாழ்கையின் வறுமை
ஒழிக்கவே வேண்டி
ஆயிரம் ஆயிரம்
தியாகங்கள் புரிந்து
திரவியம் தேட
திரை கடல் தாண்டி நான்
தெரியாத இடம்
புரியாத மொழி
பழக்கம் இல்லாத உணவு என
பறவையின் உதிர்ந்த சிறகாய்
அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டு
இருக்கிறேன்
உதிரத்தை வேர்வையக்கி
உழைத்து உழைத்து
என் அகக்கண்ணை
திருக்கவே வேண்டி
கடன் பட்ட தந்தை
அர வயிறு கஞ்சி
கிழிந்த சேலை
அளவில்லா அன்பு
புன்னகை மட்டுமே
பொன்நகையாய் சுமந்து
இளமையை எல்லாம் கழித்த
என் தாய்
அல்ல அல்ல குறையாத
காதலை அள்ளித்தந்த அமுதசுரபி
என் மனைவி
உயிருக்கு உயிரான
எங்கள் காதலுக்கு
உயிரே பரிசாய்
என் எட்டு மாத குழந்தை
இவர்களை பிரிந்து
விடியலை தேடி
பரதேசியாய் நான்
நிழலின் அருமை வெயிலிலே
நீரின் அருமை கோடையிலே
காதலின் அருமை பிரிவிலே
உணர்ந்தவனாய்
தாகித்தே மூன்று வருடம்
கழித்தபடி நான்
மூன்று வருட பிரிவு
தந்தையின் கடன் தீர்த்து
தாய்க்கு தங்கம் வாங்கி
குழந்தைக்காய் கொஞ்சம் பணம் சேமித்து
மனைவிக்கு இந்த பிரிந்த நாட்களில்
சேமித்து வைத்த முத்தங்கள்
அனைத்தையும் சுமந்தவனாய்
ஆனந்த கண்ணீர் சொறிந்தபடி
அவர்களை நோக்கி பறந்து
பயணித்து கொண்டிருக்கிறேன்