நேரம் கொஞ்சம் கூடினால்
இரவில் படுத்துறங்கும் நேரம் கூடினால்
கனவை எடுத்தாண்டு நிணைவேட்டில் கிடத்தி பின்முக வரலாற்றில் கூட்டுவேன் யானும்
நேர்முகமாய் உறங்காது கெட்டேன்
பகற்பொழுதில் விழித்திருக்கும் நேரம் கூடினால்
திகைப்பூட்டும் ஒளியகத்துள் நுழைந்து உலகமெலாம் சுற்றி வந்துவந்து மகிழ்வேன்
உள்முகமாய் விழியாது கெட்டேன்
விழிமுகமாய் உன்னிடம் ஒன்று கேட்பேன்
வழிமொழிந்து என்னிடம் கடங்கொடு தமிழே
இல்லாத நேரத்தில் அள்ளாத மணத்தை
கொள்ளாத கூடாவேன்