அலையிடு

வேலை முடித்தது தந்தருங் களைப்பில்
மாலை நேரம் வீடு திரும்பும்
பாலை முகமாய் தாவி தொட்டடுத்து
காலைப் போல புத்துணர் கூட்டி
ஆலைமுன் பேருந்து நிறுத்தும் இடத்தில்
நாலம்பு தொடுக்க நின்று இருந்தேன்

நீல வானம் சிவந்த பின்பது
நீதான் எனக்கு வேண்டும் என்பதாய்
வாள்வீணை மீட்டி நடந்து வந்தாள்
சீர்தூக்கிப் பார்த்ததால் சிக்கொண்டது மஞ்சொளி
சேர்ந்துவந்த தோழியரும் கூடாது போந்தர்
இருவரும் ஒருகோட்டில் இணைந்த பொழுது
கருவன்பும் வெண்கருவும் குறுக்கலை கொண்டெழுந்து

உனதுஅலை யிடுஎனது அலையெடு என்பதுவாய்
பண்பலை வானில் நன்பகல் போல
மனத்துள் மனமது மயங்கி விநாடி
ஒன்றில் உருமாறி உளவறிந்து கணமது
ஒன்றோட்டுப் பாதையில் நடந்தர் மௌனமது
மன்றாட கன்ணாடை துறந்தாள்

எழுதியவர் : குருநாதன் (7-Feb-13, 11:52 pm)
சேர்த்தது : குருநாதன்
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே