காதல் கடவுள்
முதலும் இல்லை
முடிவும் இல்லை ....
அதனால் கடவுளாய் ஆனது என் காதல்...
நான் நம்புவதால்
என் கண்ணுக்கு தெரியும் காதல்,
பிறர் கண்ணுக்கு தெரியவில்லை ....
அதனால் கடவுளாய் ஆனது என் காதல்....
இருக்குமிடம் தெரிவதில்லை ,
அது இல்லாமல் இருக்க முடிவதுமில்லை....
அதனால் கடவுளாய் ஆனது என் காதல்...
நான் நினைப்பதே இல்லை,
ஆனால் அது என் நினைவை விட்டு நீங்குவதில்லை ...
அதனால் கடவுளாய் ஆனது என் காதல்...