வாழவிடுங்கள் !!!

இந்த…
பிஞ்சி பாதங்கள்
வஞ்சகப் பூமியில்
பதிந்த பொழுது..
காத்திருந்த கோர முட்கள்
தையல்போட்டு சிரிக்கின்றன…..

இந்த..
பிஞ்சி உள்ளத்தை
கொஞ்சிட..
எந்த உள்ளமும்
முன் வர மறுக்கிறது
கெஞ்சிடும் ஆசைகள்
வஞ்சிக்கப்பட்டு மடிகின்றன….

பறக்கும் குருவிக்கும்
இருக்கும் சுதந்திரம்
இந்த பிஞ்சிக்கு இல்லையே….

வானத்து நிலவும்
கானத்து குயிலும்
இந்த பிஞ்சிக்கு
ஆறுதல்.. ஆயின்
ஞாலத்து இதயங்கள் மட்டும்
ஏனோ முகம் கோணுகின்றன..!!

எழுதியவர் : தமிழ்தாசன் எம்.பி.எஸ்.கே,க (9-Feb-13, 8:53 am)
சேர்த்தது : thamilthasan MPSK
பார்வை : 85

மேலே