காதலா….! சாதலா..!!!

தென்னந்தோப்போரம்
தெவிட்டா தென்றலில்
தேடியே அலந்தேன்..
தேவி…என் காதலியை

மேகக் கூட்டங்களும்
மெத்தனமாய் பறந்து வர
மோகனப் புன்னகை
மோகனாவை காணத்துடித்தேன்…

கடல் அலைகளும்
கரையை முத்தமிட்டே
காலத்தி மென்றன..
கன்னி நீ ஏனோ
கனவில் மட்டும் வந்து
கண்ணம்பூச்சி காட்டியே
காலத்தை போக்கினாய்….

இனியும் என்னால்
இங்கே நிற்க இயலா…
இரவும் கூட
இரக்க உணர்வில்
இங்கிதம் தெரியா என்னை
இளித்துப் பார்த்தது
இளிச்சயவாயன் நான்
இனியும் இருக்க மாட்டேன்…..

கன்னி நீ
இனி
கல்லறயில் வந்து
கண்ணீரை தானம் செய்தாலும்
என்..
காதல் மடியாது..!!
சாதல் பிறவாது !!!

எழுதியவர் : தமிழ்தாசன் எம்.பி.எஸ்.கே,க (9-Feb-13, 9:05 am)
சேர்த்தது : thamilthasan MPSK
பார்வை : 95

மேலே