குடி

விடலையில் கற்றதால்
விடமுடியாமல் பலர்
---- ----- ----- -----
கணுகணுவாய் வளர்ந்தது
அணுஅணுவாய் கொல்கிறது
---- ----- ----- -----
விழிப்புணர்ச்சி கூடாதென
மக்கள் விழிமூட அரசின் சதியோ?
---- ----- ----- -----
தினக்கூலிகள்
தினமும் பலி...
---- ----- ----- -----
வீட்டு வாயிலில் தடுமாற்றம்
அறுந்தன உறவுகள்
திரைச்சீலையோடு சேர்ந்து
----- ----- ----- -----
நல்லதோ கெட்டதோ
நான்கு பீர்பாட்டில் மூடிகள் மிஞ்சும்
---- ----- ----- -----
அய்யனாரும்கருப்பனாரும்
மூடிகள் திறந்ததில்லை
பூசாரிகள்தான்...
---- ----- ----- -----
"மச்சி பீர் கூட இல்லையாடா"
நல்ல நண்பனின்
நயமான தூண்டல்..
---- ----- ----- -----
தளரும்
நரம்பும் வாழ்வும்
வளரும்
அரசும் முறுக்குகாரனும்
---- ----- ----- -----
ரேசன் கடையில்
"சரக்கு வரல"
மதுபானக் கடையில்
"சரக்கு இல்ல"
அடிக்கடி ஒலிக்கும் வார்த்தைகள்
---- ----- ----- -----
இளமையில் பழகிப்போகும்
முதுமையில் அழுகிப்போகும்
---- ----- ----- -----
பழக பழக
பாலும் புளிக்கும்
இப்பழக்கம் அல்ல
---- ----- ----- -----

எழுதியவர் : Cheers Chandru (9-Feb-13, 1:07 pm)
சேர்த்தது : cheerschandru
பார்வை : 104

மேலே