மனித நீதி

நீதியை தூக்கு மாட்டி
நிறையை அதன் தட்டில் வைத்தால்
குறையா குற்றமெல்லாம்
கூடுது அதன் தொண்டை வரை
தலைதான் எழுத்தாய் மாறி
தண்ணீரில் போட்ட கோலமென
விதிதான் வேடிக்கை பார்க்கும்
வேதனையை என்னில் தேக்கும்
தராசில் தொங்கும் நீதி
தமிழென்று உயிரை விட
எந்திர இதயம் இன்று
எப்படித்தான் ஈழ எடையை போடும்

எழுதியவர் : . ' . கவி (13-Nov-10, 10:14 am)
Tanglish : manitha neethi
பார்வை : 495

மேலே