aanDavanum nam vaazhkaiyum

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
ஆண்டவன் யார்? எப்படி இருப்பார்?
ஆணா? பெண்ணா?, குட்டையா, உயரமா?
இப்பாற்பட்ட கேள்விகள் சகஜம்
எழும் நம் மனதில் தினம் தினம்
இக்கேள்விகளுக்கெல்லாம் உள்ளது பதில்
அந்த நான் மறை வேதத்தில்
ஆண்டவன் என்பது மகா பெரும் சக்தி
அதைக்கற்பனைச்செய்ய நமக்கில்லை யுக்தி
பூமி, ஆகாயம், மற்றும் அனைத்து மண்டலங்கள்
அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டவர் கடவுள்
கடவுள் ஆணுமில்லை, பெண்ணுமில்லை
ஆண்டவனுக்கு இனமே இல்லை
உலகம் உட்பட பிரம்மாண்டம் இறைவனிடத்தில் தொடங்குகிறது
அந்த இறைவனிடத்தே முடிகிறது
வாழ்வு ஒரு சக்கரம்
பம்பரம் போல் சுழலும்
பிறப்பு மற்றும் இறப்பு
இறப்பு மற்றும் பிறப்பு
இது தொடர்ந்து கொண்டே இருக்கும்
எண்ணிக்கை எண்ண இயலாதெவருக்கும்
பிறப்பதும் பிரிவதும் ஆன்மா
மடிவது வெறும் உடல் தான்
உயிருக்குள் இருப்பது ஜீவாத்மா
அந்தப்பரமன் எல்லோர்க்கும் பரமாத்மா
சூரியன் ஒன்று, கிரணங்கள் ஆயிரமாயிரம்
சூரியன் பரமாத்மா, கிரணங்கள் ஜீவாத்மா
துன்பம் வரும் வேளை, இறைவனை நினைப்பாருண்டு
அச்சமயத்தில் ஆண்டவனை நிந்திப்பாருமுண்டு
மகிழ்ச்சி நேரம் ஆண்டவனை நினைக்கிறோமா?
நம் நன்றியைத்தான் செலுத்துகிறோமா?
நாம் வாழும் வாழ்க்கை, ஆண்டவனின் லீலை
சுகம், துக்கம் விளைவது, அவரவர் விதி வினை
எனவே என் மனமே நீ எப்போதும் நினை
அந்த ஆண்டவனை, உன்க்கில்லை தீமை

தாமரைச்செல்வி (புனைப்பெயர்)
பத்மா பாரத்வாஜ்

எழுதியவர் : (13-Nov-10, 11:50 am)
சேர்த்தது : Padma Bharadwaj
பார்வை : 318

மேலே