சென்னைக் காற்றே! சென்னைக் காற்றே!
சென்னைக் காற்றே!
சென்னைக் காற்றே!
காய்ந்த மூங்கில் குச்சிக்கு
இசை தரும் நீ!
என் மூக்குக்கு மட்டும்
ஏன் நாற்றம் தருகிறாய்...?
சென்னையில் மட்டும்
ஏன் இந்த சிங்கார நாற்றம்...?
வீட்டை விட்டு வெளியே வந்தால்..
வீதிக்கொரு குப்பைத்தொட்டி
அதனுள் வீற்றிருப்பதென்ன....?
செத்த எலியா...? பெருச்சாளியா...?
காக்கைகள் கூட
கண்டுகொள்வதில்லை!
கண்டுகொண்டால்
அவை உயிரோடு இருப்பதில்லை
தெருவைத் தாண்ட முடியவில்லை
நுரையீரல் நுரைதள்ளிப் போகுது
அட அதையும் தாண்டி வந்தால்
குடலைப் புரட்டி வாந்தி எடுக்க
குறுக்கே வருது நகராச்சி குப்பை வண்டி
இடை மறிக்கிறது கோழி வண்டி
ப்ராயிலர் கோழி வண்டி...
எல்லாம் மாறிப்போச்சு
இதுமட்டும் இன்னும்
ஏன் மாறாமல் போச்சு?
என்னைப் பற்றி
ஏன் எழுதவில்லை..?
கோபத்தில் கூவம்
மூச்சை அடைத்தது
மயங்கி விழுந்தேன்!
.................பரிதி.முத்துராசன்